தமிழகத்தில் அரசுப் பேருந்து போக்குவரத்து அடியோடு முடங்கியது

தமிழகத்தில் போக்குவரத்து ஊழி யர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதால் பேருந்துப் போக்குவரத்து பல இடங்களில் அடியோடு முடங்கி யது. ஓய்வுபெற்ற 10,000 ஊழி யர்களுக்கு பென்ஷன் தொகை வழங்காமல் மாநில அரசு இழுத் தடிப்பதைக் கண்டித்தும் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கை களை வலியுறுத்தியும் இப்போராட் டத்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங் கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பென்ஷன் தொகை ரூ.1,480 கோடியையும் பணியில் இருக்கும் ஊழியர் களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளப் பாக்கி ரூ.250 கோடி யையும் உடனே வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

நிலுவைத் தொகைகளை ஊழி யர்களுக்கு வழங்குவது தொடர் பாக மாநில போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ் கருடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். நிலுவைத் தொகையில் ரூ.500 கோடியை மட்டுமே வழங்க முடியும் என அமைச்சர் கூறியதால் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்க வில்லை. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 115,000 ஊழியர்கள் வேலைநிறுத் தத்தைத் தொடங்கினர்.