ரஜினிக்காக கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்கும் பாஜக

அரசியலில் கால்பதிக்க இருப்ப தாக நடிகர் ரஜினிகாந்த் கோடி காட்டியிருக்கும் நிலையில், அவ ருக்காக பாரதிய ஜனதா கட்சி தனது கதவுகளை எப்போதும் திறந்துவைத்திருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இருப்பினும், இதில் முடிவு எடுக்கவேண்டியது ரஜினிதான் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். அண்மையில் சென்னையில் தன் ரசிகர்களைச் சந்தித்தபோது, தனக்கு அரசியலில் குதிக்கும் எண்ணமில்லை என்றும் ஆனா லும் ஆண்டவனது விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் அர சியலில் இறங்குவேன் என்றும் ரஜினி பேசியிருந்தார்.

ரஜினி அரசியலில் குதிப்பதற்கு அரசியல்வாதிகள் மத்தியில் ஆதர வும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கின் றன. ரஜினி அரசியலில் குதிப்பது உறுதி என்றும் அதற்காக அவர் மறைமுகமாகத் திட்டம் தீட்டி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அப்படி அவர் அரசியலில் அடியெடுத்து வைத்தால் நிச்சயம் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உறுதியுடன் கூறி வருகிறார்.2017-05-22 06:00:00 +0800