கடல் வழியாக இந்தியாவிற்கு 2,000 கிலோ தங்கம் கடத்தல்

இந்தியாவின் ஆகப் பெரிய தங்கக் கடத்தல் கும்பலைப் பிடித்துவிட்டதாக அந்நாட்டின் வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர். ஹர்னெக் சிங் என்ற டெல்லி தொழிலதிபரின் தலைமையிலான அக்கும்பல், துபாயில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இதுவரை கிட்டத்தட்ட ரூ.600 கோடி (S$129 மில்லியன்) மதிப் புள்ள 2,000 கிலோ தங்கத்தைக் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் துபாயிலிருந்து சரக்கில் மறைத்து வைத்து அனுப்பிய ரூ.15 கோடி மதிப்புடைய 52 கிலோ தங்கத்தை குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அதிகாரி கள் நேற்று முன்தினம் கைப்பற்றினர்.

முன்னதாக, இம்மாதம் 13ஆம் தேதி முந்த்ரா துறைமுகத்தில் இருந்து சரக்கை ஏற்றிக்கொண்டு டெல்லி சென்ற ஒரு லாரியை இடைமறித்து, அதிகாரிகள் சோத னையிட்டபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 44 கிலோ தங்கம் சிக்கியது. இந்தக் கடத்தல் சம்பவங் களின் மூளையாகக் கருதப்படும் ஹர்னெக் சிங் கைது செய்யப் பட்டு, நீதிமன்றக் காவலில் வைக் கப்பட்டுள்ளான். இவன் கடந்த ஈராண்டுகளில் மட்டும் இப்படி சட்டவிரோதமாக 300 கிலோ வுக்கும் அதிகமான தங்கத்தை இந்தியாவுக்குக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!