தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்: சகாயம் விளக்கம்

நெல்லை: தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இந்த நோக்கத்திற்காக தாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதாகக் கூறினார். இதற்கிடையே, நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத் துக்கு தாம் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவலை சகாயம் திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தாம் இதுவரை வெளியிடவில்லை என்றார் அவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் ரஜினியை ஆதரிப்பதாக சகாயம் கூறினார் என கடந்த இரு தினங்களாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ரஜினிக்கு ஆதரவு என்ற தகவ லில் எந்தவித உண்மையும் இல்லை என்றார். இதன்வழி இணை யத்தில் பரவிய தகவலுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!