புகைபிடிப்போர் எண்ணிக்கை குறைந்தது

சென்னை: தமிழகத்தில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின் றன. சிகரெட் உறைகளில் (பாக்கெட்) புகைபிடிப்போரை எச்சரிக்கும் வகையில் இடம்பெறும் படங்களே இதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது. “சிகரெட் உறைகளில் இத்த கைய படங்கள் இடம்பெற வேண் டும் எனும் சட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத் தப்பட்டுள்ளது. எனினும் எச்சரிக்கை படங்களின் அளவு பெரிதாகியதால் ஓரளவு பலன் கிடைத்துள்ளது,” என்கிறார் தமி ழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் குழந்தைசாமி.

தற்போது ஒவ்வொரு சிகரெட் உறையிலும் எண்பது விழுக்காடு பகுதியை, புகைபிடிப்பதால் ஏற் படக்கூடிய பாதிப்புகளை எடுத்துக் காட்டும் படங்கள் ஆக்கிரமித் துள்ளன. இது புகைபிடிப்போர் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. “மெதுவாக, அதே சமயம் சீரான வகையில் புகைபிடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும் தமிழகம் உள்ளிட்ட இரு மாநிலங் களில் மட்டுமே புகை பிடிப்போர் எண்ணிக்கை பத்து விழுக்காடு அளவு குறைந்துள்ளது. “எச்சரிக்கை படங்கள் மட்டுமே இந்த எண்ணிக்கையை வெகு வாகக் குறைத்துவிடாது. மாறாக, பள்ளிப் பருவத்திலேயே புகை பிடிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு தீங்குகள் குறித்து புரிய வைக்க வேண்டும்,” என்கிறார் குழந்தைசாமி.