மத்திய அரசின் மிரட்டலால் தமிழக அரசு மிரள்கிறது

மிரட்டும் மத்திய அரசு, மிரளும் தமிழக அரசு: முத்தரசன் விமர்சனம் கோவை: தமிழக அரசை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் சாடியுள்ளார். இந்த மிரட்டலைக் கண்டு தமிழக அரசு மிரள்வதாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழக அரசின் பலவீனத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என மத்திய அரசு நினைப்ப தாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் பணிகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்வது என்பது இதுவரை தமிழகத்தில் நடக்காத சம்பவம் எனச் சுட்டிக்காட்டினார். “உள்ளாட்சித் தேர் தலை நடத்த அரசு அஞ்சுகிறது. அதிமுக அணிகள் இணை வது பிரதமர் மோடியின் கையில் உள்ளது,” என்றார் முத்தரசன்.