டெல்லி: சாமி ஓம்மிற்கு தர்ம அடி; பொய் முடி கழன்றது

புதுடெல்லி: டெல்லியில் சாமி ஓம்மிற்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுக்கும் காணொளி காட்சி ஒன்று சமூக வலைத் தளங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் உள்ள விகாஸ் நகரில் நாதுராம் கோட்சேயின் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. அங்கு சாமி ஓம் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டார். சாமி ஓம் ஏற்கெனவே பெண்களை இழிவாகப் பேசு பவர். தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாகப் பேசி அடி வாங்கிய அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சாமி ஓம் வந்ததுமே கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. விழா மேடையில் ஏறி பேசு வதற்குச் சாமி ஓம் சென்றார். அப்போது அங்கிருந்த ஒருவர் சாமி ஓம்மை பிடித்து நையப் புடைத்தார். உடன் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சாமியார், மக்கள் கொடுத்த தர்ம அடியைத் தாங்க முடியாமல் கழன்று விழுந்த பொய்முடியுடன் ஓட்டம் பிடித்தார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!