கெஜ்ரிவால்: என் மீதான அவரது குற்றச்சாட்டுகளை எதிர்க் கட்சியினரே நம்பமாட்டார்கள்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டு களில் எந்த ஒரு அடிப்படை ஆதா ரமும் இல்லை. என் மீதான அவரது குற்றச்சாட்டுகளை எதிர்க் கட்சியினர் கூட நம்பமாட்டார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "மிஸ்ராவின் குற்றச்சாட்டு களில் துளியேனும் உண்மை இருந்திருந்தால் கூட இந்நேரத்தில் நான் சிறைக் கம்பிகளை அல்லவா எண்ணிக் கொண்டிருக்கவேண் டும்," என்று கபில் மிஸ்ராவின் தொடர் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பில் தனது மௌனம் கலைத்து விளக்கம் அளித்துள் ளார் கெஜ்ரிவால்.

மிஷ்ராவின் பெயரைக் குறிப் பிடாமல், தங்களது சொந்த உறுப்பினர்களாலேயே 'முதுகில் குத்தப்படுவது' மிகுந்த மன வலியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரி வால் ஆட்சியின் கீழ் அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. அவர் அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதையடுத்து, கெஜ்ரிவால் ஒரு அமைச்சரிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆம் ஆத்மிக்கு எதிராக 6 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார்.

இந்நிலையில், கபில் மிஸ்ரா நேற்று முன்தினம் புதிய குற்றச் சாட்டு ஒன்றை சுமத்தினார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியில் இருந்த போது, உயர் பாதுகாப்பு வாகன நம்பர் பிளேட் தயாரிப்பதற்காக சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அப்போது அதில் ரூ.400 கோடி ஊழல் நடந் தது தெரியவர, அதுபற்றி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!