முக்கால் மணி நேரம் கெஞ்சியும் மூன்று பேரை அடித்தே கொன்ற கும்பல்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநி லத்தில் நிகழ்ந்த கும்பல் தாக்கு தலில் உயிரிழந்தோரின் சகோ தரர் கண்ணீர் மல்க பேட்டி யளித்துள்ளார். தமது அண்ணன் விகாஸ் வர்மாவுடன் கழிப்பறை கட்ட நிலத்தைச் சரிசெய்ய முயன்ற போது கிராமவாசிகள் தங்களை சந்தேகத்துடன் கேள்விகள் கேட்டதாக உத்தம் வர்மா கூறி னார். பிள்ளை பிடிக்கும் கும்பல் என்று சமூக ஊடகங்களில் பரவிய தகவலைத் தொடர்ந்து கிராமவாசிகள் தங்களது அடை யாள அட்டையைக் கேட்டதாக வும் தம்மிடம் அடையாள அட்டை இருந்ததால் தம்மை விட்டுவிட்ட கும்பல் தமது அண் ணனைத் தாக்க முயன்றதாக உத்தம் கூறினார். "நாங்கள் பிள்ளை பிடிக்கும் கும்பல் இல்லை என்பதை நிரூ பிக்க அருகிலுள்ள எங்களது வீட்டுக்குச் சென்று எனது தாயாரை அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டேன். அப்போது எனது மற்றோர் அண்ணண் கௌதமும் நண்பர் கங்கே‌ஷும் அங்கு வந்தனர்.

"தகராறு நடப்பதாக தகவல் அறிந்து அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த போலிசார் அங்கு திரண்டிருந்த 500 பேரைத் தூண்டிவிட்டனர். இவர்கள்தான் பிள்ளை பிடிப்பவர்கள் என்று போலிசார் சொன்னதும் கிராம மக்கள் எனது அண்ணன்களை யும் கங்கேஷையும் அடித்தே கொன்றுவிட்டனர். "அவர்களை விட்டுவிடுமாறு முக்கால் மணி நேரம் கெஞ்சி னேன். ஆனால், எனது கெஞ் சலை காதில் வாங்கிக்கொள்ளா மல் பலரும் அந்த மூவரை அடித் தனர், உதைத்தனர். இரும்புக் கம்பிகளாலும் கற்களாலும் உயிர்போகும் வரை தாக்கினர். போலிசார் வேடிக்கை பார்த்தனர்," என்றார் உத்தம் வர்மா. பிள்ளை பிடிக்கும் கும்பல் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஏராளமான தகவல்கள் பரவி யதைத் தொடர்ந்து ராஜாநகர் பகுதியிலும் பதற்றம் நிலவி யதாகக் கூறப்பட்டது. ஷோபா பூர், சோசோமௌலி ஆகிய கிரா மங்களில் ஐவர் இதேபோன்ற வதந்திக்காக அடித்துக் கொல் லப்பட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!