சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்

சென்னை: சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். எனினும் நடப்பு அதிமுக ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவது ஜனநாய கத்தை நசுக்கும் செயலாகும். “அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் இணைந்து சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் திருமாவளவன்.