துரோகம் செய்கிறது மத்திய அரசு: ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிபர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரிக்கக்கூடாது என வலியுறுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, வர்தா புயல் நிவாரணம் வழங்காதது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் சாகுபடிக்காக விவசாயிகள் வாங்கியுள்ள கடனை அரசு ரத்து செய்ய வேண்டுமென்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!