28 ஆண்டுகளாக ரத்ததானம்: தேநீர் கடைக்காரர் நற்செயல்

விழுப்பும்: தமது பதினெட்டாவது வயதில் தொடங்கி இன்றுவரை கடந்த 28 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகிறார் ராஜேந்திரன். விழுப்புரத்தைச் சேர்ந்த 46 வயதான இவர், ஆண்டுக்கு 4 முறை ரத்தத்தை தானமாக வழங் குவதை கடமையாகக் கொண்டுள் ளார். சொந்தமாக தேநீர்க்கடை வைத்துள்ள இவர், இதுவரை 112 முறை ரத்த தானம் வழங்கியிருப் பது குறிப்பிடத்தக்கது. ரத்தம் கொடுப்பதால் தமக்கு சோர்வு ஏதும் ஏற்படுவதில்லை என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிடும் ராஜேந்திரன், அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறார். “எனது மனைவி பர்கானாவும் அவ்வப்போது ரத்த தானம் அளிக் கிறார். 12ஆம் வகுப்பு பயிலும் எனது மகன் ராகுலும் 18ஆவது வயதில் ரத்த தானத்தைத் தொடங்கி உள்ளார். அவரும் என் வழியைத் தொடர்வார்,” என்கிறார் ராஜேந்திரன்.

Loading...
Load next