ஐந்தாயிரம் ஜவுளிக் கடைகள் அடைப்பு: ரூ.30 கோடிக்கு பாதிப்பு

ஈரோடு: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலை யில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளிக் கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. ஏறத்தாழ 5 ஆயிரம் கடைகள் இப்போராட்டத்தில் பங்கேற்ற தாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஈரோடு ஜவுளித் தொழில் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ஜவுளி தொழிலுக் கும் அது சார்ந்த நிறுவனங்க ளுக்கும் 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளதை ஏற்க இயலாது என்றனர்.

வேட்டி, சேலை, ஜாடா, மல்லு போன்றவைகளுக்கு இதுவரை வரி விதிக்கப்பட்டதில்லை எனச் சுட்டிக்காட்டும் அவர்கள், ஜிஎஸ்டி வரிவதிப்பு நடைமுறைக்கு வந் தால் 5 விழுக்காடு வரி என்பது கூடுதல் சுமையாகிவிடும் எனக் கவலை தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமை யாக பாதிக்கப்படும் என்று குறிப் பிட்ட ஜவுளி வியாபாரிகள், நேற் றைய கடையடைப்பு போராட்டம் காரணமாக ஜவுளி மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon