தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம்

சென்னை: லஞ்ச வழக்கில் பிணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ள டிடிவி தினகரன் தற்போது முழுவீச்சில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சி செய்வது முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை நெருக்கடிக்கு ஆட்படுத்தி உள்ளது. சிறைவாசம் முடிந்த பின்னர் அவர் பங்கேற்க உள்ள முதல் பொதுக்கூட்டமானது ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டை எனக் கருதப்படும் தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தினகரனின் ஆதரவாளர்கள் விரிவாகச் செய்து வருகின்றனர்.

தினகரன் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதை அமைச் சர்கள் சிலர் விரும்பவில்லை. ஆனால் அவர்களது எதிர்ப்பு களைப் புறந்தள்ளிவிட்டு, தன் போக்கில் சென்று கொண்டிருக்கி றார் தினகரன். அவருக்கு இது வரை 34 எம்எல்ஏக்களும் 5 எம்பிக்களும் ஆதரவு தெரிவித் துள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவ தும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது மாநாடு போன்று பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் அதிமுக அம்மா அணியினர் தயாராகி வருகிறார்கள். இந்தக் கூட்டங்களில் தினகரன் உணர் வுப்பூர்வமாக உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. “கட்சிப்பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபடுவார். இதன் பொருட்டு மிக விரைவில் அவர் தலைமைக்கழகத்துக்கு வருவார். அவரால்தான் கட்சியை காப்பாற்ற முடியும். “அப்போது கண்டிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்கிறார் அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன். இதனால் அதிமுக வட்டாரங் களில் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon