சுடச் சுடச் செய்திகள்

அய்யாக்கண்ணு: திரையுலக ஆதரவும் வேண்டும்

சென்னை: நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தும் தங்களை போராடும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தவே அரசுத் தரப்பு நினைப்பதாக விவசாயி அய்யாக்கண்ணு கூறியுள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரான அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கு திரையுலகத்தின ரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். “தமிழக முதல்வர் விவசாயிக ளின் கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாகக் கூறுகிறார். ஆனால் செய்வதில்லை. எங்க ளுக்கு தெரிந்தது போராட்டம் ஒன்றுதான்,” என்றார் அய்யாக் கண்ணு. பிரதமரும் தங்களைச் சந்திக்க முன்வரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலுக்குப் பிறகு விவ சாயிகளை சில தரப்பினர் அடிமை களாகப் பார்ப்பதாகச் சாடினார். “விவசாயிகள் குறித்து நடிகர் விஜய் கூறியது உண்மைதான். அவரைப்போல் திரையுலகிலுள்ள அனைவரும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவும் தேவை,” என்றார் விவசாயி அய்யாக்கண்ணு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon