சுடச் சுடச் செய்திகள்

தலைமைச் செயலகத்தில் பாம்பு

சென்னை: தமிழக தலைமைச் செயலகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகச் செய்தியாளர் அறைக்கு அருகில் உள்ள நூலக அலுவலகத்திற்குள் பாம்பு சென்றதைப் பார்த்த போலிசார், தீயணைப்பு வீரர்களுக்கு அது பற்றி தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பதுங்கியிருந்த எட்டு அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது. பாம்பு பிடிக்கப்படும் போது பாம்பின் வால் துண்டாகிவிட்டது. பிடிபட்ட பாம்பு கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்னையில் விடப்பட்டது.