பெங்களூருவில் ரகசியமாக ஒரு சந்திப்பு

சென்னை: ரகசியமாக பெங்களூரு சென்ற டிடிவி தினகரன், பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரனை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் நலம் விசாரித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலாவை அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் கடந்த 5ஆம் தேதி சந்தித்தார். 60 நாட்கள் பொறுமை காக்குமாறு சசிகலா அறிவுறுத்தி உள்ளதாக பிறகு தினகரன் செய்தியாளர்களி டம் தெரிவித்தார்.

இனிமேல் கட்சி பணிகளில் தான் ஈடுபடப்போவ தாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், தன் சகோதரர் சுதாகரனை தினகரன் திடீரென வியாழக்கிழமை சுமார் 40 நிமிடங் கள் சந்தித்துப் பேசினார். சந்திப் புக்கான காரணம் தெரியவில்லை. “இந்தச் சந்திப்பு திடீரென முடிவானதால் யாருக்கும் தெரி விக்கவில்லை. சசிகலாவை இன் னொரு நாள் தினகரன் மீண்டும் சந்திப்பார்,” என்று தகவல் வட் டாரம் ஒன்று தெரிவித்தது.