சுடச் சுடச் செய்திகள்

அதலபாதாளத்துக்குச் சென்ற நீர்மட்டம்

சென்னை: திண்டுக்கல் மாநகராட்- சி யைச் சேர்ந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்- துக்குச் சென்றுவிட்டதால் குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்- ளாகியுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த் தேக்கம் வறண்டு காணப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நீர்த்தேக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்து நீர் இரைக்கப்பட்டு விநியோகிக்கப்படு- கிறது. நீர்த்தேக்கப் பகுதியில் பத்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்- கும் பணியும் நடை பெற்றுவருகிறது. மற்றொரு நீர் ஆதாரமான காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழக்கமாக திண்டுக்கல் மாநக- ராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரில் பாதியளவு கூட விநியோகிக்கப் படாததால் கடும் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.

நகர் பகுதிகளில் வாரம் ஒரு- முறை குடிநீர் விநி யோகம் செய்யும் மாநகராட்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை, 20 நாட்களுக்கு ஒரு முறை எனக் கால அளவை நீட்டித்துத் தற்போது 25 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்- கிறது. சில நேரங்களில் குழாய் உடைப்புக் காரணமாக மாதம் ஒரு- முறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தற்போது நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்றதால் நகரில் பல பகுதிகளில் வீடுகளில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளில் தண்ணீர் இல்லை. லட்சுமிசுந்தரம் காலனி, கோபால் நகர், அரசன் நகர் பகுதி வீடுகளில் 600 முதல் 700 அடி வரை துளையிடப்பட்ட போர்வெல்களில் நீர்மட்டம் வெகு- வாக குறைந்துவிட்டதால் குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இத- னால் ஆறாயிரம் லிட்டர் கொண்ட டேங்கர் ரூ. 750க்கு விலைக்கு வாங்கி வீடுகளில் உள்ள தொட்டி களில் சேமித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon