அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்யலாம்

சென்னை: அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் இதுபோன்ற நிலங்களைச் சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்யவேண்டும் என் றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்- களை அழித்து சட்டவிரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாகவும், இதனால் விவசாயமும் விவசாய நிலங்களும் அழிந்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தர விட்டது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், ‘பத்திரப்பதிவுச் சட்டம் பிரிவு 22 (ஏ)வின்படி, அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீ- காரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம். ஆனால், அதன் பின்னர் உருவாக்- கப்படும் வீட்டு மனைகளைப் பத்- தி ரப்பதிவு செய்யக்கூடாது’ என்று கூறியிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பத்- திரப்பதிவுக்கு ஏற்கெனவே விதிக்- கப்பட்ட தடையைத் தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்- னர், இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, செப்- டம்பர் 9ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தடையை நீட்டித்தும், மார்ச் 28ஆம் தேதி உத்தரவை ரத்து செய்தும் மீண்டும் உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon