சுடச் சுடச் செய்திகள்

மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. இது குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் கட்சி அலுவலகம் அருகே இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் சில நிமிடங்கள் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் திடீரென அலுவலகத்தின் மீது சில பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

இந்தக் குண்டுகள் பெரும் சத்தத்துடன் வெடித்ததால் கட்சி அலுவலகத்துக்கு அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பதறியடித்து வெளியே வந்து பார்த்தனர். அதற்குள் குண்டு களை வீசியவர்கள் அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரி விக்கப்பட்டது. போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணையும் ஆய்வும் மேற் கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலிசார் தற்போது பார்வையிட்டு வருகின் றனர். மர்ம நபர்கள் யார்?, எதற்காக குண்டுகளை வீசிச் சென்றனர்? என்பது தொடர்பில் விசாரணை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. பீர் புட்டியில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டு வீசப்பட்டதாகத் தெரிகிறது. இதில் கட்சி அலுவல கத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்துள்ளது. காரின் ஓட்டுநர் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்த வேளையில் சிலர் தங்கள் கைவரி சையைக் காட்டிச்சென்றதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.