சுடச் சுடச் செய்திகள்

வீண் மோதல் பாஜகவுக்கு சாதகமாகும்: சசிகலா கடிதம்

சென்னை: அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் கட்சியையும் ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனத் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு சசிகலா நடராஜன் சிறையில் இருந்தபடி கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தமது குடும்பத்தாரையும் தீவிர ஆதரவாளர்களையும் அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தினகரனுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“நமக்குள் மோதல் ஏற்பட்டால் அது பாஜகவுக்கும் முதல்வர் எடப்பாடி தரப்புக்கும்தான் லாபமாக அமையும். எனவே மோதலை நிறுத்துங்கள்,” என உறவினர்களுக்கான கடிதத்தில் கூறப்பட்டிருப்ப தாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதற்கிடையே, சிறையில் உள்ள தம்மைப் பெரும்பாலான எம்எல்ஏக்களும் அமைச் சர்களும் நேரில் வந்து சந்திக்காதது சசிகலாவுக்கு வருத்தத்தையும் அதிர்ச்சி யையும் தந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்நிலையில், சசிகலாவுக்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பல்வேறு சிறை விதிகள் மீறப்பட்டுள்ளதாக கர்நாடக ஊடகங்களில் பரபரப்புச் செய்தி வெளியாகி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon