இந்திய ராணுவத் தகவல்களை திருடும் தொலைபேசி நிலையங்கள்

இந்தியாவை வேவு பார்க்க மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தொலைபேசி நிலையங்கள் போலிஸ் படையின் கண்ணில் சிக்கியதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள் ளனர். அம்மாநிலத்தின் லாட்டூர் என் னும் பகுதியில் அதுபோன்று மூன்று சட்டவிரோத தொலைபேசி நிலையங்கள் நடத்தப்பட்டு வந்த தாகவும் அவை பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல் களை அனுப்பி வந்ததாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களை பாகிஸ்தா னுக்கு அனுப்புவதை அந்நிலையங் கள் முக்கிய வேலையாகச் செய்து வந்தன.

துப்பு கிடைத்ததன் பேரில் வேட்டையில் இறங்கிய உள்ளூர் போலிசார் தொலைபேசி நிலையங் களை முற்றுகையிட்டு சந்தேக நபர் களைத் தேடினர். மூன்று சோதனை நடவடிக்கை களில் 96 சிம் கார்டுகள், ஒரு கணினி, சட்டவிரோத அனைத் துலகத் தொலைபேசி தகவல் பரி மாற்றத்திற்கான மூன்று கருவிகள் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். இதர இரு இடங்களில் நடத் தப்பட்ட சோதனைகளிலும் 70க்கு மேற்பட்ட சிம் கார்டுகள் சிக்கின. இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடு வோர் இதுபோன்ற சட்டவிரோத தொலைபேசி நிலையங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று இந்திய பயங்கரவாத முறியடிப்புப் படை நம்புகிறது.