துணை அதிபர் பதவியை பெற பேரம் பேசும் அதிமுக

இந்திய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வேளையில் தமிழகத்தில் ஆட்சி புரியும் (பிளவுபட்ட) அதிமுக பேரத்தில் இறங்கி இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக் கின்றன. ஒன்றுபட்ட அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் 49 உறுப்பினர்கள் உள் ளனர். இவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் என்று மூன்று வெவ்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதிபர் தேர்தலுக்கு இவர்கள் அனை வரும் ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் நிலையில் உள்ளனர். பாஜக நிறுத்தும் அதிபர் வேட்பாளர் வெற்றிபெற இந்த 49 உறுப்பினர்களின் ஆதரவு அவசி யம் தேவை. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநிலத் துக்குத் தேவையானவற்றைப் பெறும் வகையில் அதிமுகவின் அதிகாரபூர்வ ‘நமது எம்ஜிஆர்’ நாளேட்டில் கவிதை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்துக்கு நன்மை அளிக்கும் வகையில் காவிரி மேலாண்மை அமைக்கவோ ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக் கவோ மத்தியில் ஆளும் பாஜக அரசு முன்வரவில்லை. இருந்த போதிலும் மத்திய அரசு அறி முகப்படுத்தும் ஜிஎஸ்டி உள் ளிட்ட எல்லாத் திட்டங்களையும் அதிமுக தோழமை உணர்வுடன் ஆதரித்து வருகிறது. “அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக நலனுக்குத் தேவையானவற்றை பாஜக அரசு செய்யப்போகிறதா? அல்லது துணை அதிபர் பதவியை விட்டுத் தரப்போகிறதா?,” என்று அந்தக் கவிதையில் எழுதப்பட்டு உள்ளது. தற்போது துணை அதிபராக உள்ள முஹம்மது ஹமித் அன் சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் நிறைவுறுகிறது.

அந்தப் பதவிக்கு தமிழ கத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும் தற்போதைய கேரள மாநில ஆளு நருமான பி.சதாசிவத்தை (68) அதிமுக பரிந்துரைத்து வருவ தாக ‘டெக்கான் குரோனிகல்’ இணையச்செய்தி தெரிவிக்கிறது.

முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும் தற்போதைய கேரள மாநில ஆளுநருமான பி.சதாசிவம்