இருசக்கர வாகனத்தில் முதல்வர் காரை துரத்திய மாணவர்கள் கைது

சென்னை: இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வது, வளைந்து நெளிந்து சென்று சக வாகனமோட்டிகளுக்கு இடையூறு செய்வது ஆகியவை கல்லூரி மாணவர்கள் மத்தியில் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தனது வீடு நோக்கிச் சென்ற போது, அவரது வாகன அணி வகுப்பை மூன்று கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தனர். இதைக் கண்டு பாதுகாப்பு வாகனங்களில் வந்த போலிசார், மூவரையும் ஓரமாகச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர். எனினும் மாணவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஒரே வாகனத்தில் வந்த மூவரையும் மடக்கிப் பிடித்த போலிசார், அவர்களை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் மூவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. விசாரணை தொடர்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாட்டு மாடுகள் இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. - கோப்புப்படம்

24 Jul 2019

நாட்டுப் பசு இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்து