முதல்வர் பழனிசாமி மீது வழக்கு: தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர் பான குற்றச்சாட்டின் அடிப்படை யில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இது வரை வழக்குப் பதிவு செய்யப்பட வில்லை. இதையடுத்து புதிய வழக்கை பதிவு செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறி ஞர் வைரக்கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவையடுத்து சென்னை, ஆர்.கே.நகர் தொகு திக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், அத்தொகுதி வாக்காளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பணம் விநியோகித்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் சார்பில் பல கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து மத்திய வரு மான வரித்துறை சென்னையில் அதிரடி சோதனை நடவடிக்கை களை மேற்கொண்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள் ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட் டது. அப்போது ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி விநியோகிக்கப்பட் டதற்கான ஆதாரங்கள் சிக்கிய தாகக் கூறப்படுகிறது.