சுடச் சுடச் செய்திகள்

டெல்லியே திரும்பிப் பார்க்கும்: அமைச்சர் பேச்சு

மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக சிலர் தொடர்ந்து கூறி வருவதை பொய்யாக்கும் வகையில் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், விரைவில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர் நாற்றாண்டு விழாவின் போது ஒட்டுமொத்த டெல்லியும் அதிமுகவை திரும்பிப் பார்க்கும் என்றார். இந்த நிகழ்வில் அமைச் சர் திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றார். அவர் பேசுகையில், இரட்டை இலை சின்னத்தைப் மீண்டும் பெற முதல்வர் பழனிசாமி தலைமையிலான தங்கள் அணி 10 லட்சத் திற்கு மேற்பட்ட பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதாக கூறினர்.

“இந்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் எங்கு வைப்பது என தெரியாமல் டெல்லியே திக்குமுக்காடி வருகிறது. எனினும் எதிர் அணியில் இருந்து வரக் கூடியவர்களின் வருகையை பாதிக்கக்கூடிய பேச்சாக என் பேச்சை கருத வேண்டாம்," என்றார் திண்டுக்கல் சீனிவாசன். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‘‘அதிமுகவில் வெற்றி டம் ஏற்பட்டதாக கூறுகின் றனர். அதைப் பொய்யாக்க உலகமே வியக்கும் வகை யில், டெல்லியே திரும்பி பார்க்கும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அமைய வேண்டும்," என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon