சுடச் சுடச் செய்திகள்

கள்ள நோட்டு அச்சடித்த ஆப்பிரிக்கர் கைது

குமரி: கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆப்பிரிக்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ரோப் எடிசன் என்ற பெய ருடைய, கானா நாட்டைச் சேர்ந்த அந்நபர், நேற்று முன்தினம் பெங் களூருவில் இருந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டி ருந்தார். இந்நிலையில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான அமரவிளை யில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே அப்பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் சோதனை நடந்தது. அப்போது ரோப் எடிசன் வைத்திருந்த பையில் பிரிட்டன் நாட்டின் பவுண்ட் நோட்டுக்கள் ஏராளமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் கள்ள நோட்டு தயாரிக்கும் பொருட்களும் காணப்பட்டன. இவற்றைப் பறிமுதல் செய்த போலிசார், ரோப் எடிசனுக்கு அனைத்துலக கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவருடன் மேலும் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவி கள்ள நோட்டுகளை தயாரிப்பது, கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon