மதுக் கடைகள் குறைந்தாலும் வருவாய் குறையவில்லை

சென்னை: தமிழகத்தில் மதுக் கடை களை மூட வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டைக் காட்டி லும் நடப்பாண்டில் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1,149 கோடி வருவாய் கிடைத்துள் ளது. அரசு வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண் டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன,

இதன் காரணமாக மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக கடந்த ஆண்டை விட தற்போது ரூ.1,149 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2015-=2016ஆம் ஆண்டு ஆயத்தீர்வை வருவாய் (மதிப்பு கூட்டு வரியும் சேர்த்து) ரூ.25,845.58 கோடி யாக இருந்தது. 2016-=2017 (மே மாதம் வரை) ரூ.26,995.25 கோடியாக உயர்ந்தது. அதாவது, ஒரே ஆண்டில் 1,149.67 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து இருக்கிறது. இத்தகவல் தமிழக அரசு வெளி யிட்ட கொள்கை விளக்க அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

23 Jul 2019

கேரளாவில் கனமழைக்கு எட்டு பேர் பலி

கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பளித்து கார் பரிசை தான் ஏற்றுக்கொள்ள மறுத்த கேரள மாநிலத்தின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ். படம்: ஊடகம்

23 Jul 2019

தொண்டர்களின் கார் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள கேரள எம்.பி. மறுப்பு