என்னை விமர்சிக்கும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது: தினகரன்

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை யில் இடம்பெற்றுள்ள அமைச்சர் களை நீக்கும் அதிகாரம் தமக்கு மட்டுமே உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள் ளார்.

சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து சசிகலா நடராஜன் தான் முடிவு செய்வார் என்றார். வழக்குகளைச் சந்திக்க தாம் அஞ்சவில்லை என்று குறிப்பிட்ட அவர், சிபிஐ மட்டு மன்றி அனைத்துலக காவல் துறையான இன்டர்போல் விசார ணைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

“எப்போதுமே மடியில் கன மில்லை என்பதால், எத்தகைய விசாரணை குறித்தும் பய மில்லை. அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை பொதுச் செயலர் சசிகலாவின் முடிவுக்கு 122 அதிமுக எம்எல்ஏக்களும் கட்டுப்படுவர்.

“எனக்கு எதிராகப் பேசும் அமைச்சர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள் வார்கள் என நம்புகிறேன். இந்த அமைச்சர்களை நீக்கக்கூடிய அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. இதையும் அவர்கள் உணரவேண்டும்,” என்றார் தினகரன்.

இதற்கிடையே நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை யும் தினகரனும் நேற்று பெங்க ளூர் சிறையில் உள்ள சசிக லாவை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். தற்போதைய அரசியல் நிலவ ரம் குறித்து சசிகலாவிடம் கலந்தாலோசித்ததாகக் கூறப் படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon