இனி புறப்பாடு விண்ணப்பம் தேவை இல்லை

சென்னை: இனி வெளிநாடு களுக்குச் செல்வோர் விமான நிலையங்களில் புறப்பாடு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஜூலை 1ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனினும் ரயில், கப்பல், சாலை மார்க்கமாக வெளிநாடு செல்வோர் புறப்பாடு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அவர்கள் குடியேற்ற சோதனைச் சாவடிகளில் புறப்பாடு விண்ணப்பத்தை வழக்கம் போல் பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.