சுடச் சுடச் செய்திகள்

அதிபரின் வாகனங்களை நிறுத்திய அதிகாரிக்கு பாராட்டு

பெங்களூரு: இம்மாதம் 17ஆம் தேதி இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி பெங்களூரு வந்தார். நிகழ்ச்சி ஒன்றை முடித்த பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி அதிபர் சென்றபோது அவருக்குப் பாதுகாப்பாகச் சென்ற வாகனங்களால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வாகனங்களுக்கு இடையில் சிக்கியதைக் கண்ட போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் நிஜலிங்கப்பா (படம்) அதிபரின் பாது காப்பு வாகனங்களை திடீரென நிறுத்தினார். ஆம்பு லன்சுக்கு வழி ஏற்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்த பின்னர் அந்த வாகனங்களை அனுமதித் தார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி யதைத் தொடர்ந்து நிஜலிங்கப்பாவுக்குப் பாராட்டு கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon