தேசிய கொடியை அவமதித்த முதலமைச்சரின் காரோட்டி நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டபோது அவரது காரில் தேசிய கொடி தலைகீழாகப் பறந்தது சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, தேசிய கொடியை அவமதித்ததாக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கார் ஓட்டுநர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுந்தர் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்த வழக்கில் முதலமைச்சரின் கார் ஓட்டுநர் இப்ராகிமை பணியிடை நீக்கம் செய்து முதலமைச் சரின் தனிச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.