மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பாதிப்பு

லக்னோ: மூன்றாவது அனைத் துலக யோகா தினத்தை முன் னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராமாபாய் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி யோகாசனப் பயிற்சியில் ஈடுபட் டார். அப்போது அவர் பேசுகையில், “நமது மொழி, கலாசாரம் பற்றி பல்வேறு நாடுகள் தெரிந்திருக்க வில்லை. ஆனால் இந்தியாவுக்கு வெளியே யோகா புகழ் பெற்றுள் ளது. இந்தியாவை உலகத்துடன் இணைத்துள்ளதில் யோகா பெரும் பங்காற்றுகிறது,” என்றார். அவருடன் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் அமைச்சர் களும் யோகா பயிற்சியில் ஈடு பட்டனர்.

சுமார் 51,000 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின்போது லேசான மழை குறுக்கிட்டபோதும் அதை பொருட்படுத்தாத பிரதமர் மோடி நனைந்தவாறே தொடர்ந்து யோகாசனத்தில் ஈடுபட்டார். மாணவ, மாணவியரும் மழை யில் நனைந்தவாறே யோகாசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்காக ஏராளமான மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கே திடலுக்கு வரவழைக் கப்பட்டிருந்தனர். அதனால் அவர்கள் களைப்பாக இருந்த தோடு மழையிலும் நனைந்ததால் 70 மாணவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் லோக் பந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர் களுக்கு மருந்து மற்றும் ஊசி போடப்பட்டது. இதில் 22 பேர் மருத்துவ மனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மழை யில் நனைந்ததால் மாணவி களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மழையில் நனைந்தவாறு யோகாசனம் செய்த மோடி. படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்