நேப்பாள சிறுமிகள் கடத்தல் - பெற்றோர் கைது

புதுச்சேரி: நேப்பாளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் புதுச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வரு கிறார். கூர்க்காவான இவரின் மகள், உறவினரின் மகள் ஆகிய இருவரும் காணாமல் போனதாக போலிசில் புகார் அளித்தனர். இதுகுறித்து பெரியகடை போலிசார் விசாரித்ததில், ஜெயக் குமாரின் உறவினர் சுனந்தாதேவி சிறுமிகளைக் கடத்தியது தெரிய வந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுமிகளுடன் திங்கட்கிழமை சுனந்தாதேவி கைதானார். சுனந்தா தேவியிடம் நடத்திய விசாரணையில் அவரது பெற்றோ ருக்கும் கடத்தலில் தொடர் பி ருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களையும் போலிசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் திருச்சி, கோவையில் ஏற்கெனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்