‘சாஃப்ரா சிங்கப்பூர் பே ரன்’

தேசிய சேவையின் 50ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங் களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு சாஃப்ரா சிங்கப்பூர் பே ரன் ஓட்டம், ராணுவ அரை மாரத்தான் ஓட்டங்க ளுக்குப் பின்னர் அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்கும் வகையில் கூடுதல் நடவடிக்கைகளுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள், இன்னாள் தேசிய சேவையாளர்களுக்கு இடையே தோழமை உணர்வை வலுப்படுத் தும் நோக்கத்தில் இந்த அங்கங் கள் நடத்தப்படும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது.

புதிய ‘என்எஸ்50’ குழு ஓட்டத் தில் முன்னாள், இன்னாள் தேசிய சேவையாளர்கள் குழுவுக்கு பத்து உறுப்பினர்கள் என்ற நிலையில் ஓடுவார்கள். ஒவ்வொரு குழுவும் 5 கிலோ மீட்டர் ஓடி முடிவில் 50 கிலோமீட்டர் தொலைவை முடிக் கும். மற்றொரு புதிய ஓட்டப் பிரிவில் தேசிய மாணவர் ராணுவப் படை யின் மாணவர்களும் தயார்நிலை தேசிய சேவையாளர்களாக உள்ள தங்கள் தந்தையர்கள் என மொத் தம் 50 பேர் ஓடுவார்கள். ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நடைபெறும் இந்த ஓட்டத்துக்கு சாஃப்ரா மன்றமும் சிங்கப்பூர் ராணுவப் படையும் கூட்டாக ஏற் பாடு செய்துள்ளன. தேசிய சேவையாளர்கள், அவர் களின் குடும்பத்தினர் ஆகியோரி டையே உடலுறுதியையும் குடும்ப பிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த ஓட்டம் நடை பெறும்.

சாஃப்ரா பே ரன் ஓட்டத்துக்குப் பிறகு நடைபெறும் கேளிக்கை விழாவில் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு வகையான அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. படத்தில் இந்திய பெற்றோர் தங்கள் பிள்ளையுடன் வாகனச் சக்கரத்தைப் புரட்டிபோடும் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். படம்: சாஃப்ரா மன்றம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடத்தல் கும்பலிடமிருந்து 123 கிலோ தங்கம், ரூ.2 கோடி பணம் மற்றும் 9,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: ஊடகம்

18 Oct 2019

தமிழக-கேரள தங்கக் கடத்தல் கும்பல் கைது

‘நூர்’ எனப் பெயரிடப்பட்ட பெண் புலிக்காக இவ்விரு புலி சகோதரர்களும் சண்டையிட்டுக்கொண்டதாக வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிட்டார். படம்: வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் வெளியிட்ட காணொளியிலிருந்து

18 Oct 2019

புலிகளும் இப்படித்தானா? பெண்புலிக்காக சீறிப்பாய்ந்து சண்டையிட்ட சகோதரர்கள்