தமிழகத்தில் கூகல் மையம்: தமிழக அரசு முயற்சி

சென்னை: பிரபல கூகல் நிறுவனத்தின் மையம் ஒன்றைத் தமிழகத்தில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய மையம் அமைப்பது தொடர்பில் கூகல் நிறுவனத் தின் தலைமைச் செயல் இயக் குநர் சுந்தர் பிச்சையுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள் ளார். நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் தொழில்துறை மாநியக் கோரிக்கை நடவடிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி அண்மையில் சுந்தர் பிச்சை தமிழகம் வந்திருந்தபோது அரசுத் தரப்பில் அவருக்கு ஏன் வரவேற்பு அளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், சுந்தர் பிச்சை தன் தாய் நாட்டுக்கு வருகை மேற்கொண்டதாகவும் தமிழகத்துக்கு எனத் திட்டம் ஏதேனும் அறிவித்திருந்தால் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டிருக்கும் என்றும் கூறினார். இதையடுத்து பேசிய அமைச் சர் மணிகண்டன், மிக விரைவில் அமெரிக்கா அல்லது சிங்கப்பூரில் சுந்தர் பிச்சையைச் சந்திக்க இருப்பதாகவும் அச் சமயம் தமிழகத்தில் மதுரை அல்லது தென்பகுதியில் கூகல் நிறுவனத்தின் மையத்தை அமைப்பது குறித்து பேசப்படும் என விளக்கம் அளித்தார். அமைச்சர் அளித்த இந்த விளக்கத்தை அடுத்து தமிழகத் தில் கூகுள் மையம் அமைப்பது தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

23 Jul 2019

கேரளாவில் கனமழைக்கு எட்டு பேர் பலி

கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பளித்து கார் பரிசை தான் ஏற்றுக்கொள்ள மறுத்த கேரள மாநிலத்தின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ். படம்: ஊடகம்

23 Jul 2019

தொண்டர்களின் கார் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள கேரள எம்.பி. மறுப்பு