சுடச் சுடச் செய்திகள்

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கம்

கோவை: நாட்டிலேயே முதல் முறையாகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. கோவையில் உள்ள அம்மருத்துவமனையின் இயக்குநரான ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1992ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளைக் கொண்டு செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரவும் பயன்படும் என்றார். இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு மணி நேரத்துக்கு இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்த ரூ.1.25 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றார். இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon