நீரிழிவு நோயாளிகள் 13 லட்சம் பேர் மரணம்: புதிய புள்ளிவிவரம்

சென்னை: இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகள் குறித்து பல்வேறு புள்ளி விவரங் களை அப்போலோ மருத்துவ மனையின் துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி வெளியிட்டுள்ளார். அதன்படி நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உலகளவில் நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா மாறி வருவதாக பிரீத்தா ரெட்டி கவலை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் நீரிழிவு நோயால் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர். நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. “அண்மையில் நாடு முழுவதும் 6 லட்சம் பேருக்கு நீரிழிவு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 1.25 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட் டுள்ளது,” என்றார் பிரீத்தா ரெட்டி. நீரிழிவு நோய் பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த தற்போதுள்ள உயரிய சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் அனைத்துலக நீரிழிவு நோய் தடுப்பு கருத்தரங்கு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உலக அளவில் சிறந்து விளங்கும் நீரிழிவு நோய் தடுப்பு மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்பதாக தெரிவித்தார்.

நீரிழிவு நோய் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், நீரிழிவு காரணமாக மனிதர் களுக்குப் பல்வேறு உபாதைகள் ஏற்படும் என்றும் அதனால் உயிருக்கே ஆபத்து விளையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

23 Jul 2019

கேரளாவில் கனமழைக்கு எட்டு பேர் பலி

கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பளித்து கார் பரிசை தான் ஏற்றுக்கொள்ள மறுத்த கேரள மாநிலத்தின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ். படம்: ஊடகம்

23 Jul 2019

தொண்டர்களின் கார் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள கேரள எம்.பி. மறுப்பு