திருமா, நெப்போலியனுக்கு எதிராகப் பிடியாணை

கடலூர்: தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பில் நீதிமன்றத் தில் முன்னிலை ஆகாத திருமா வளவன், நடிகர் நெப்போ லியனுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருவர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பிரசாரம் மேற் கொண்டனர். அப்போது தேர்தல் விதி களை மீறியதாக திருமாவளவன், நெப்போலியன், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர் கள் மீது வழக்குப் பதிவானது.

இந்த வழக்கு விசாரணை யின்போது மற்ற அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், திருமாவளவனும் நெப்போலியனும் மட்டும் இது வரை முன்னிலையாகவில்லை. இதற்கான காரணத்தை விளக்கி இருவரது வழக்கறி ஞர்களும் மனுக்கள் தாக்கல் செய்தனர். எனினும் இம்மனுக்களை ஏற்க மறுத்த நீதிபதி, அவற்றை தள்ளுபடி செய்ததுடன், இருவ ருக்கும் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இருவரும் கைது நட வடிக்கையை எதிர்கொண்டுள் ளனர்.