பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு: சகோதரர் என்கிறார் தம்பிதுரை

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தமது சகோதரரைப் போன்றவர் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை (படம்) தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று முன்தினம் அவர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் அணிகள் ஏதுமில்லை என்றார். “அதிமுகவில் அனைவருமே சகோதரர்களைப் போல் பழகி வருகிறோம். எல்லோருமே ஓரணியாகத்தான் இருக்கிறோம். அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். அதைக் கட்டிக்காக்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுகிறோம்,” என்றார் தம்பிதுரை. அதிபர் தேர்தலுக்கான நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைமைக் கழகம்தான் இறுதி முடிவெடுத்தது என்றார் அவர். அதில் சசிகலாவும் ஓர் அங்கமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அதை ஆமோதிப்பது போல தம்பிதுரை தலையசைத்தார்.

Loading...
Load next