சுடச் சுடச் செய்திகள்

நீட் தேர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுக எதிர்ப்பு

சென்னை: முதல்வர் எடப் பாடி பழனிசாமி தலைமையி லான அதிமுக அரசானது, தமிழக நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது தொடர்பாக வெளி யிட்ட அறிக்கை ஒன்றில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ள அவர், 85 விழுக் காடு ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு வெளியிட் டுள்ள அரசாணையால் எந்த வகையிலும் மாநில நலன்கள் காக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைப்படியே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவச் சேர்க்கை நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநில கல்வி முறையில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் இந்நட வடிக்கையால் தமிழக மாணவர்களுக்கு நன்மை விளையாது என்பதே திமுக முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. “நீட் மசோதாவுக்கு அனுமதியளித்தால் மட்டுமே அதிபர் தேர்தலில் ஆதரவு என்று பாஜகவுக்கு அதிமுக ஏன் நிபந்தனை விதிக்க வில்லை? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon