மாடுகளை ஏற்றி வந்த வாகனத்தை தடுத்த பாஜகவினரால் பரபரப்பு

சிவகங்கை: மாட்டிறைச்சி மீதான தடைக்குப் பிறகு வாகனங்க ளில் மாடுகளை ஏற்றிச் செல்வது பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சாத்தூரைச் சேர்ந்த சும்சுதீன் என்ப வரும் சிக்கலைச் சந்தித்துள்ளார். நேற்று முன்தினம் அவர், தேவகோட்டை சந்தையில் 27 மாடுகளை வாங்கி, தன் வேனில் ஏற்றிச் சென்றார். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே வந்த போது, உள்ளூர் பாஜகவினர் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். சிறிய வாகனத்தில் அதிக மாடுகளை ஏற்றிச் செல்வதாக புகார் எழுப்பிய அவர்கள், நகர காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சிவகங்கை ஜமாத்தைச் சேர்ந்த பலரும், வாகனத்தையும் மாடுளையும் விடுவிக்க வலியுறுத்த, பாஜகவினருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் போலிசார் விடுத்தனர்.