வீடுகள், வீட்டு மனைகள் வாங்க புதிய விதிகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வீடுகள், வீட்டு மனைகள் வாங்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட் டுள்ளன. கட்டட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்து தலும்) விதிகள் 2017 என்ற பிரி வின்கீழ் பல்வேறு விதிகளை உரு வாக்கி அறிவித்துள்ளது தமிழக அரசு. இனி இந்த விதிகளைப் பின்பற்றியே கட்டுமான, விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்கு படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கடந்த மே முதலாம் தேதி யன்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களும் அச்சட்டத்தைப் பின்பற்றத் தயாராகி வருகின்றன. தமிழக அரசும் அத்தகைய நடவ டிக்கையை மேற்கொண்டுள்ளது.

இனி தமிழகத்தில் ஒவ்வொரு நில மேம்பாட்டாளரும், தனது திட்டத்திற்குண்டான நிலம் தொடர்பாக எவ்வித வில்லங்கமும் இல்லை எனப் பிரமாணப் பத்திரம் வழி சான்றளிக்க வேண்டும் என புதிய விதி கொண்டு வரப் பட்டுள்ளது. மேலும், அந்நிலத்திற்கு சட்டப் பூர்வமாக உரிமை பெற்றவர் என உறுதிமொழி பத்திரம் அளிப்ப துடன், குறிப்பிட்ட அத்திட்டம் நிறைவு பெறும் காலத்தையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தில் சான்றளிக்க வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதி நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர், சட்டத் துறை செயலர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவானது, மிக விரைவில் ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும், இரண்டு உறுப்பினர்களை தேர்ந் தெடுக்க உரிய பரிந்துரைகளை வழங்கும் என அரசு அறிவித் துள்ளது.

"குழுமம் அமைக்கப்பட்ட பிறகு 500 சதுரமீட்டர் நிலப்பரப்ப ளவு அல்லது எட்டு அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அத்தகைய திட்டங்கள் குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்விதிகள் நடந்து வரும் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்," என புதிய விதி தெரிவிக்கிறது. குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு கட்டிட மனையையும் விற்பனை செய்ய இயலாது என்ப தும் ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்டத்திற்காக வசூலித்த 70 சதவீத தொகையை திட்டத்திற் காக தனிக் கணக்கு துவக்கி வைப்பீடு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் இல்லாமல் ஒதுக்கீட்டாளரிடம் இருந்து திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக பணம் பெறக் கூடாது என்பதும் புதிய விதிகளில் ஒன்று.

மேலும், அந்தப் பத்திரத்தில் அலகின் மொத்த மதிப்பினையும் குறிப்பிட்டு பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் பல புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அலகுகள் ஒதுக்கீடு செய்த பின்னர், அடுத்த ஐந்து ஆண்டுக ளுக்குள் கட்டட கட்டுமானத் திலோ, வேலைப்பாட்டிலோ, தரத் திலோ, சேவையிலோ ஏதேனும் குறைபாடு இருப்பின் அதனை மேம்பாட்டாளர் தனது சொந்த செலவில் சரி செய்து தர வேண்டும் என்கிறது மற்றொரு விதி. அதற்கான அவகாசமாக 30 நாட்கள் தரப்பட்டுள்ளது. "இந்தச் சட்டத்தின் கீழ் குழு மம் அல்லது தீர்ப்பாளரால் பிறப் பிக்கப்படும் முடிவுகள், செயலா ணையால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் மேல்முறையீட்டு தீர்ப்பா யத்தில் முறையீடு செய்யலாம். அம்மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கொண்டிருக்கும்

. "இதன் மூலம் வீடுகள், வீட்டு மனைகள் வாங்குவோருக்கு உரிய பாதுகாப்பும் உத்தரவாதமும் கிடைக்கிறது," என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள். இச்சட்டத்தின் கீழ் பல்வேறு அபராதங்களுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அபராதங்கள் திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காடு அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும்.2017-06-26 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!