இந்தியில் கடப்பிதழ்: மத்திய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு

சென்னை: இந்திய கடப்பிதழ்கள் இனி இந்தி மொழியில் வழங்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியில் கடப்பிதழ் என்ற அறி விப்பு தமிழக மக்களின் உணர்வு களைக் கொச்சைப்படுத்தும் செயல் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு அலுவலகங்களில் திட்டமிட்டு நடக்கும் இந்தித் திணிப்பு, மத்திய அரசு பணியில் சேர விரும்புவோருக்கு இந்தி கட்டாயம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந் திக்கு முதலிடம் என எண்ணற்ற இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தித் திணிப்பு நடவடிக் கைகளில் ஈடுபடுவதைத் தவிர நாட்டில் தங்களுக்கு வேறு பணியே இல்லை என்பது போல மத்திய பாஜக அரசு செயல்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதர வளிக்கும் செயல் அல்ல என சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியில் கடப்பிதழ் வழங்கும் பட்சத்தில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் நாட்டு மக்கள் விரும் பும் மொழியிலும் ஆங்கிலத்திலும் கடப்பிதழ் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மாறாக இந்தியில் மட்டும் கூடுதலாக கடப்பிதழ்களை வழங்குவது இந்தித் திணிப்பாகவே பார்க்கப்படும் என அவர் சுட்டிக் காட்டி உள்ளார். மத்திய அரசு இது தொடர்பான முடிவை உடனடி யாகக் கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர், இல்லையெனில் பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கவி ஞர் வைரமுத்து, மத்திய அரசின் இந்தித் திணிப்பு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்றார். இந்தித் திணிப்பை தமிழ் அறிந்தவர்கள் மட்டுமல்ல, தமிழை தாய்மொழியாகக் கொண்ட யாரும் பொறுத்துக் கொள்ளவோ, ஏற் கவோ இயலாது என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு