குடிநீர் கேட்டு நடந்த சாலை மறியல்

ஈரோடு: பருவ மழை பொய்த்ததால் தமிழகம் கடும் வறட்சி நிலவும் நிலையில், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்துறை செங்கோடம்பள்ளம் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பகுதியில் கடந்த இரு வாரங் களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் பொதுமக்கள், காலிக் குடங்களுடன் ஈரோடு-பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இத னால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைந்துபோக வைத்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்