சுடச் சுடச் செய்திகள்

அடாவடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகரைக் கைது செய்த பெண் போலிஸ்

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி, அபராதம் விதிக் கப்பட்டதால் அடாவடியில் ஈடுபட்ட பாஜக தொண்டர் ஒருவரை சிரேஷ்தா தாகூர் என்ற மூத்த போலிஸ் அதிகாரி கைது செய்துள்ளார். மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள புலண்ட்ஷரில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைத் தளங்களில் வெளியிடப் பட்டுள்ளது.

பாஜக அரசு ஆட்சியில் இருப் பதால் அபராதத்தை கட்ட அவர் மறுத்துள்ளார். ஆனால் அதிகாரி சிரேஷ்த தாகூர் மிகவும் கண்டிப் பாக நடந்து கொண்டார். “முதல் அமைச்சரிடம் இருந்து வாகனங் களைச் சோதிக்க போலிசுக்கு அதிகாரம் இல்லை என்று கடிதம் வாங்கி வாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய முடி யாது என்று எழுதி வாங்கி வாருங் கள். நாங்கள் எங்கள் குடும்பங் களை விட்டுவிட்டு இங்கே நிற்பது பொழுதுபோக்காக இல்லை. வேலை செய்ய,” என்று அவர் கடு மையாகக் கூறியுள்ளார். “இதனால் உங்கள் கட்சிக்கு நீங்கள் மேலும் கெட்ட பெயரை உண்டாக்குகி றீர்கள்,” என்றும் அவர் கூறினார்.

அதனால் எரிச்சலடைந்த அந்த பிரமுகர் சிரேஷ்தா தாகூரை மிக மோசமாகப் பேசியுள்ளார். அவருடன் மற்றத் தொண்டர்களும் அவரைச் சூழ்ந்து நின்று கூச்சல் போட்டனர். இதனால் பொது ஒழுங்கைக் கெடுத்ததற்கான மேலும் ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தப் படும் என்று கூறி அந்த அதிகாரி அவரைக் கைது செய்தார். இதனை அடுத்து, அந்த அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என உ.பி. பாஜகவினர் போராட்டம் செய்தனர்.