இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு

இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருமாறு அமெரிக்க நிறு வனங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு அதிகாரத் துவப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கூகல் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் அஜய் பங்கா உள்பட 20 முக்கிய அமெரிக்கத் தொழில் அதிபர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். “இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப் பட்டுவரும் பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவில் பெருமளவில் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.

“மேலும், தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள பொருள்சேவை வரியினால் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. எனவே, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா வில் புதிய தொழில்களைத் தொடங்குவதுடன், ஏற்கெனவே உள்ள தொழில்களில் கூடுதல் முதலீடு செய்து விரிவுபடுத்தவும் வேண்டும். தொழில் தொடங்கு வதில் அரசின் தலையீட்டைக் குறைத்து, நிர்வாகத் திறனுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட் டுள்ளது. இப்போது, உலகமே இந்தியாவை உற்று நோக்கும் நிலை உள்ளது,” என்றார் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய - அமெரிக்க வர்த்தகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக மோடி நேற்று அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்