தமிழகத்தில் போதைப் புழக்கம், கடத்தல் அதிகரிப்பு

தமிழ் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சட்டவிரோத போதைப் பொருள் விற்பனையும் போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்துள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக அதிகமாக இந்த ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் தமிழ் நாடு முழுவதும் 115 கிலோ கிராம் ஹெராயினை அமலாக்க அமைப்புகள் கைப்பற்றியுள்ளன. இதே காலகட்டத்தில் 86 கிலோ கிராம் எஃபிட்ரின் கைப் பற்றப் பட்டது. இது 2016ல் கைப் பற்றப் பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும். அதேபோல் எம்பிடமின் போதைப் பொருள் பறிமுதலும் சென்ற ஆண்டைவிட 25% இவ்வாண்டு கூடியுள்ளது.

தமிழகத்தின் 1,067 கிலோ மீட்டர் நீள கடற்கரை, தென்கிழக்காசிய நாடுகளுடனான தடையற்ற வான்வழித் தொடர்பு, இந் தியாவின் அனைத்துப் பகுதிக ளுடனும் தமிழ்நாட்டை இணைக் கும் தேசிய, மாநில விரைவுச் சாலைகள் போன்ற வசதிகளால் போதைப் பொருள் கடத்துவோரின் முக்கிய கேந்திரமாகவும் கடல் போக்குவரத்து மையமாகவும் தமிழகம் மீண்டும் உருவாகி வருகிறது. இயற்கை பொருட்களால் உருவாக்கப்படும் போதைப் பொருட்களான ஹெராயின், கொகெய்ன், கஞ்சா போன்றவற்றுடன் செயற்கை போதைப் பொருட்கள், போதைப் பொருட்கள் தயாரிக்கப் பொருட்களையும் இந்தக் கும்பல் கள் கடத்துகின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஹெராயின் கடத்தலை சார்ந்தி ருந்ததால் தமிழ்நாட்டில் 1990களில் சட்டவிரோதப் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்தது. இப்போது மீண்டும் தலையெடுத்துள்ளன என்று ஆய் வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தென் கிழக்காசியாவுக்கு போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு இலங்கை மையமாகத் திகழ்கிறது என்றும் இதில் தமிழ் நாடு வழியாகவே கடத்தல் கும்பல்களை போதைப் பொருட் களைக் கடத்துகிறது இந்தியா வின் போதைப் பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon