புதுக்கோட்டை மாவட்ட மஞ்சுவிரட்டுகளில் 146 மாடுபிடி வீரர்கள் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர், மூக்கம்பட்டி, காக்காபெருமேடு மற்றும் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டிகளில்  காளைகள் முட்டி 146 பேர் காயமடைந்தனர். ஆவூரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 631 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை அடக்க களமிறங் கிய 185 மாடுபிடி வீரர்களில் 41 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். இதேபோல, மூக்கம்பட்டி, கரைவெட்டி, காக்காபெருமேடு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பலர் காயமடைந்தனர். படம்: தகவல் ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon