சென்னையில் காணாமல் போன 719 பேர் கண்டுபிடிப்பு

சென்னை: நடப்பாண்டில் மட்டும் சென்னையில் 1064 பேர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 719 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் மாநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படை போலிசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் பலனாக கடந்த ஆண்டுகளில் காணாமல் போன 452 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தவிர, நடப்பாண்டில் காணாமல் போனவர்களில் 719 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில், வடக்கு காவல் மண்டலத்தில் 82 பேர், மேற்கு மண்டலத்தில் 154 பேர், கிழக்கு மண்டத்தில் 107 பேர், தெற்கு மண்டலத்தில் 376 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.